Daily Horoscope
✕

அற்புதமான சுவையில் தேங்காய் சாதம் செய்வது எப்படி...?

Written By Sasikala
Published: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:54 IST)
தேவையான பொருட்கள்:

பச்சரிசி சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது)
துருவின தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
பச்சைமிளகாய் - 1
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு - கைப்பிடி அளவு



செய்முறை:

இஞ்சியை துருவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல்,  மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். தேவைப்பட்டால் இதனுடன் முந்திரியை வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். சுவையான தேங்காய் சாதம் தயார்.

எல்லாம் காட்டு

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

அடுத்த கட்டுரையில்
Show comments