ஆரோக்கியம் தரும் கீரை மசியல் செய்ய....!!
தேவையானபொருள்கள்:
அரைக்கீரை - 4 கப்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டுப் பல் - 3
தக்காளி - 1 (சிறியது)
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து கழுவி பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறிதாக நறுக்கிக் வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கீரை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல், உப்பு, சோடா உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
கீரையில் தண்ணீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். கை விடாமல் 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கீரையோடு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கீரை மசியல் தயார்.