விஜய் ரசிகரின் வீட்டுக்கு சென்று சமையல் செய்த ஷோபா: வைரலாகும் புகைப்படம்!

Last Modified செவ்வாய், 21 ஜனவரி 2020 (19:16 IST)
தளபதி விஜயின் ரசிகர்கள் விஜய் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கின்றார்களோ, அதே அளவுக்கு விஜய்யின் பெற்றோர்கள் மீதும் அன்பு வைத்துள்ளனர் என்பது பல நிகழ்வுகளில் இருந்து நாம் தெரிந்து கொண்டுள்ளோம். இந்த நிலையில் விஜய்யின் பெற்றோர்களான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினர் சமீபத்தில் மதுரைக்கு தங்களது உறவினர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு சென்றனர். அப்போது அங்கு தற்செயலாக இந்த தம்பதியை சந்தித்த மதுரை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முகேஷ் என்பவர் தனது இல்லத்திற்கு இருவரும் வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட எஸ்ஏ சந்திரசேகர்-ஷோபா தம்பதியினர் முகேஷின் வீட்டிற்குச் சென்றனர். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் விஜய் பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும் மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் முகேஷின் தாயார் விஜய்யின் பெற்றோர் தங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று கூற அதற்கு விஜய்யின் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து தடபுடலாக விருந்து தயார் ஆனது
இந்த சமையல் தயாராகிக் கொண்டிருக்கும்போது திடீரென சமையல் அறையில் நுழைந்த ஷோபா அவர்களுக்கு சமையல் உதவி செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ரசிகர்கள் மீது விஜய் மட்டுமின்றி அவருடைய பெற்றோர்களும் எந்த அளவுக்கு பாசம் வைத்துள்ளனர் என்பது இந்த நிகழ்வில் இருந்து தெரியவருகிறது


இதில் மேலும் படிக்கவும் :