தொடர்புடைய செய்திகள்
- பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி...?
- கொரோனா விவகாரம்: தமிழகத்தை பின்பற்றும் மகாராஷ்டிரா
- பஞ்சபூதங்களின் ஆசீர்வாதத்தை பெற்று செய்யும் தொழிலில் தடைகளை நீக்கும் அற்புத பரிகாரம்...!!
- நீடிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையின் முடிவு... மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்த விவகாரம் !
- சோறு இல்ல; உப்பு தண்ணி தான் குடி தண்ணி: தனித்தீவில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!
சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி...!!
தேவையான பொருள்கள்:
மாங்காய் - 1
வெல்லம் - 2
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
கடுகு - சிறிது
உளுந்து - சிறிது
மிளகாய் தூள் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிதளவு
செய்முறை:
மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.
மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்த வைத்துள்ள வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும்.
