வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (15:42 IST)

கொரோனா விவகாரம்: தமிழகத்தை பின்பற்றும் மகாராஷ்டிரா

தமிழகத்தை பின்பற்றும் மகாராஷ்டிரா
இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வரும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என சற்று முன்னர் தமிழக அரசு அறிவித்ததை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழக அரசை பின்பற்றி மகாராஷ்டிர மாநில அரசும் நாளை காலை வரை மக்கள் சுய ஊரடங்கு நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதனை  மகாரஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் உறுதி செய்துள்ளார்.
 
ஏற்கனவே இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இன்று மேலும் 10 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை அடுத்து மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்தியாவில் மொத்தம் ஐந்து பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்த நிலையில் இதில் 2 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இன்று நடைபெற்று வரும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை நாளை வரை நீட்டிக்க மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,