1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

எளிதான முறையில் சுவையான காரா சேவ் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 2 1/2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 2 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
முதலில் மிக்ஸியில் மிளகை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய் தூள், மிளகுப் பொடி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி மென்மையாகவும், முறுக்கு மாவு பதத்திற்கும் பிசைந்து கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய்யானது சூடானதும், முறுக்கு அச்சை எடுத்து, அதனுள் மாவை வைத்து, எண்ணெய்யில் பிழிய வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான காரா சேவ் தயார்.