திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (15:40 IST)

எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர்!

சாப்பிடும் சப்பாத்தியில் எச்சை துப்பி சமைப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த உலகில் யாருக்கும் பணம், பொருட்களைக் கொடுத்தால் அது போதுமென்று கூற மாட்டார்கள். ஆனால், சாப்பாடு மட்டும் போதுமெனக் கூறுவார்கள்.

ஆனால், அந்தச் சாப்பாட்டில் ஒருவர் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கொரொனா காலம் என்பதால் வீதியில் எச்சில் துப்புவதே தவறு எனக் கூறப்படும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சாலையோர உணவகத்தில் ஒரு சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.