திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Sasikala

கோதுமை மாவில் முறுக்கு செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
தனி மிளகாய் தூள்  - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
ஓமம் - 1/4 ஸ்பூன்
தேவையான அளவு  - உப்பு
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:
 
முறுக்கு மாவு செய்ய: முதலில் 1 கப் அளவு கோதுமை மாவு, அரிசி மாவு 1 கப். பச்சையாக இருக்கும் இந்த கோதுமை மாவில் முறுக்கு செய்தால் சரியாக வராது. இதை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வைத்து வேகவைக்கவேண்டும். (வெறும் மாவைதான் வேக வைக்கவேண்டும். மாவில் உப்பு தண்ணீர் எதுவுமே கலக்க வேண்டாம்). 
 
மாவு வெந்தவுடன் இட்லி பானையில் இருந்து எடுத்து, ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆற வையுங்கள். வேகவைத்த கோதுமை மாவு கட்டி கட்டியாகதான் இருக்கும். (கட்டி கட்டியாக வந்தால்தான் மாவு வெந்து விட்டதாக அர்த்தம்.) இந்த மாவு கை பொறுக்கும் சூடுக்கு ஆறியவுடன் ஒன்றும் இரண்டுமாக  மாவை உங்கள் கைகளாலேயே உடைத்து விட்டு, இந்த மாவை மிக்ஸி ஜாரில் போட்டு 2 ஓட்டு ஓட்டி சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கோதுமை மாவு முறுக்கு செய்ய தயாராகி விடும். 
 
ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த கோதுமை மாவை எடுத்து வைத்துள்ள தனி மிளகாய் தூள், பெருங்காயத்தூள், ஓமம், தேவையான அளவு உப்பு, எண்ணெய் 2 ஸ்பூன், சேர்த்து முதலில் மாவை நன்றாக கலந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். 
 
அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட்டு விடுங்கள். பின்னர் முறுக்கு அச்சில் போட்டு ஸ்டார் அச்சில், ஜல்லி கரண்டியில் முறுக்கிப் பிழிந்து, கடாயில் இருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டியதுதான். சூப்பரான கோதுமை மாவு முறுக்கு தயார்.