செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

அரைத்து விட்ட சாம்பார் செய்வது எப்படி...?

தேவையானவை: 
 
வெங்காயம் - 1
தக்காளி - 2
பெருங்காயம் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - தலா 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
 
வறுத்து அரைக்க:
 
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன் தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன் தாளிக்க 
செய்முறை:
 
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சிறு தீயில் காய்ந்த மிளகாய், தனியா,  துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து ஆறவைத்து அரைக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து வடிகட்டி ஊற்றி, பெருங்காயம் கறிவேப்பிலை, உப்பு, தக்காளி சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பருப்பைக் கரைத்து ஊற்றி அத்துடன் அரைத்த விழுதையும் கரைத்து ஊற்றி, நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, கடுகு,  உளுந்து தாளித்துக் கொட்டவும். மேலே கறிவேப்பிலை கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். 
 
சுவையான அரைத்து விட்ட சாம்பார் தயார். இது இட்லி, தோசை பொங்கலுடன் பரிமாற ஏற்றது.