1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்துப்படி கிழக்கு பார்த்த வாசல் அமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

நாம் கட்டும் வீடு கிழக்கிலிருந்து சூரிய ஒளி பெறும் வகையில் அமைதல் வேண்டும். சூரிய ஒளி இல்லையேல் வைட்டமின் பற்றாக்குறையினால் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும்.
வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடலில் உள்ள அணைத்துத் திசுக்களுமே பொதுவாகப் பாதிக்கப்படக்கூடும். இந்த பாதிப்பின் அடையாளங்களும் அறிகுறிகளும் ஒவ்வொருவருக்கும் பலவகையான நோய்களை குறிப்பாக மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை, இரத்த  கொதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
 
சூரிய ஒளியின் மூலம் நாம் பெறும் வைட்டமின் ‘D’ நம்மை பல வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. கிழக்கு திசையில் சூரிய ஒளியில்  உருவாகும் வைட்டமின் ‘D’ முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இவை இரத்த சிவப்பணுக்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவுகின்றன.
 
கிழக்கு திசையின் சூரிய ஒளியால் உருவாகும் வைட்டமின் ‘D’ ஆணின் விந்து சந்தி அதிகரிக்கும். மேலும், குழந்தைகளுக்கு அதிகாலை சூரிய ஒளி உடல் வளர்ச்சியையும் எலும்புகள் வளர்ச்சி அடையவும், கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படாமலும் தடுக்கிறது. எனவேதான்  குழந்தைகளை காலை நேரத்தில் வெயிலில் காண்பிக்கும் பழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.