செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வீட்டின் தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதால் ஏற்படும் பலன்கள்...!!

பஞ்ச பூதங்களில் நிலம் மனிதனின் இருப்பிடமாக கருதப்படுகின்றன. வாச்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை “நைருதி மூலை” அல்லது “குபேர மூலை” என்றும் கூறுவர்.
தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தெமேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திரப்போ அமைக்கக்கூடாது.
 
பூமி சூரியனை சுற்றிச் செல்லும்போது பூமியின் மேற்பரப்பில் ஈசான்ய பகுதி சற்று தழ்ந்தும், தெமேற்கு பகுதி உயர்ந்தும் உள்ளதால் தான் நாம் நம் வீட்டின் அமைக்கும்போது தென்மேற்கு மூலையை உயரமாகவும், வடகிழக்கு மூலையை பள்ளமாகவும் வைத்துக் கொள்ளுதல்  அவசியமாகிறது.
 
வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலை (நைருதி மூலை - குபேர மூலை என்று சொல்லப்படும்)யில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும்.