திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

தென்மேற்கு மூலையில் வைக்கவேண்டிய வைக்கக்கூடாத பொருள்கள் என்ன...?

வடகிழக்கு ஈசான்யம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்த தென்மேற்கு நைருதி மூலை முக்கிய இடம் வகிக்கிறது. வடகிழக்கு எவ்வளவு வெட்ட வெளியாய் இருக்க வேண்டுமோ அதேபோல் தென்மேற்கு மூடப்பட்டிருக்க வேண்டும். 
 
 
வடகிழக்கு எவ்வளவு லேசாக உள்ளதோ அதேபோல தென்மேற்கில் அதிக பாரம் இருக்க வேண்டும். வடகிழக்கு நீண்டிருந்தால் தென்மேற்கு மூலை சரியாக இருக்க வேண்டும். இந்த இரண்டு திக்குகளும் சாஸ்திரப்படி இருந்து மற்ற வாஸ்து தோஷங்கள் அந்த வீட்டிற்கு இல்லாமல் இருந்தால் இந்த வீடு போக பாக்கியங்கள் நிறைந்து இருக்கும்.தென்மேற்கில் உள்ள தெருவாசல் மனையை தவிர்க்கவேண்டும். 
 
தென்மேற்கு திசை மூலம் எதிர்மறையான அலைகள் வீட்டை வந்து சேரும். ஆகையால் தென் மேற்கு திசையில் வீட்டின் முன் கதவு இருக்க  கூடாது.
 
சமையல் அறை என்றாலே அது தென்கிழக்கு திசையில் தான் இருக்கவேண்டும்.
 
வடகிழக்கில் கண்டிப்பாக சமையல் அறை இருக்க கூடாது. தவறான இடத்தில் உள்ள சமையல் அறை உடல்நிலை கேடு பண விஷயத்தில்  தொல்லை கொடுக்கும்.
 
தென்மேற்கு மூலையில் குடும்ப தலைவன் படுக்கை அறை இருக்கவேண்டும். மேலும் கழிவறை தென் மேற்கு மூலையில் அமைத்து  கொள்ளலாம்.
 
வீட்டில் மையத்தில் சமையல் அறை கழிவறை இருக்க கூடாது. வீட்டில் மையத்தில் வரவேற்பு அறை இருந்தால் நல்லது.