வாஸ்துவில் மனையின் அமைப்புகளை வைத்து அதன் பலன்கள்...!

vastu
Sasikala|
வடக்கு மற்றும் வடகிழக்கு வளர்ந்த(நீட்டிய) மனை: குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள். செல்வம் சொத்துக்கள் சேரும். புகழ் மதிப்பு மற்றும் பலவகையான வசதிகளும் கிடைக்கும்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு வளர்ந்த(நீட்டிய) மனை: குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொழில் வளர்ச்சி, சந்தோஷம், ஆண்களின் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.
 
கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளர்ந்த(நீட்டிய) மனை: கிழக்கு தென்கிழக்கு வளர்ந்துள்ளது இம்மனையில் அதிக பெண் குழந்தைகள் குடும்பதில்  இருக்கும். ஆண் சந்ததி குறைவாகவும் பெண் சந்ததி அதிகமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் போன்றவை ஏற்படும். பெண்கள்  உடல்நலம் கெட்டு வியாதிகள் ஏற்படலாம்.
 
மேற்கில் வடமேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: மேற்கில் வடமேற்கு வளர்ந்த மனையில் ஆண்களுக்கு மனச்சஞ்சலங்கள் ஏற்படும். புகழ் கெடும்.   பொருளாதாரம் சீர்கெடும்.  வழக்கு, கோர்ட் என அலைய வைக்கும் சில சமயங்களில் வெற்றி தரும்.
 
வடக்கு மற்றும் வடமேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: குடும்பத்தில் ஆண்கள் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு ஆளாவார்கள். பெண்களாலும்  பிரச்சினைகள் ஏற்பட்டு விவகாரங்கள் நீதிமன்றத்துக்குப் போய் வீண் செலவுகள் ஏற்படுத்தும்.
 
தெற்கு, தென்மேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: தெற்கு-தென்மேற்கு வளர்ந்த மனை பெண்கள் அதிக கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.  ஆண்கள்  சண்டை பிடிப்பவர்களாகவும், இஷ்டத்துக்கு செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
 
மேற்கு தென் மேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: மேற்கு தென்மேற்கு வளர்ந்த மனை ஆண்களுக்கு உடல் நலம் கெடும். சண்டை சச்சரவுகள்  ஏற்படும். விபத்து நேரலாம். அநியாயமாகச் சொத்து சேர்த்து அதே தீய வழிகளில் விரையமாகும். ஆண்கள் ஒரு தொழில் நிலையாக இருக்க  மாட்டார்கள். அதனால் தொழில் பாதிக்கப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :