செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By

பயன் தரக்கூடிய உபயோகமான சில கிச்சன் டிப்ஸ் பற்றி பார்ப்போம்...!

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
 
வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
 
முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்.
 
வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள  துவர்ப்பும் நீங்கி விடும்.
 
மழைக் காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல்  இருக்கும். நெய் கெடாமல் இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.
 
இடியாப்பம் மிச்சமானால் ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.
 
பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.