அண்ணா விட்டுருங்கண்ணா.. இளம் பெண்களை சீரழித்த கொடூரர்கள்

pollachi
Last Updated: திங்கள், 11 மார்ச் 2019 (19:49 IST)

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக தெரியவந்தது.
pollachi

இந்நிலையில் திருநாவுகரசுடன் தற்போது ரிஷ்வந்த் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாவற்றிற்கும் மேலாக பார் நாகராஜர் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. தற்போதுதற்போது நான்குபேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
pollachi
ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பொள்ளாச்சியில் மாசினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
pollachi

ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே நட்பாகப் பழகும் பெண்களை மயக்கி, ஆபாசமாக படம்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக
திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
pollachi
இந்த இந்த விவகாரத்தில் தன்னோடு சேர்த்து நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசாரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 1000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தற்போது போலீஸார் வசம் உள்ளதாகவும் தெரிகிறது.
pollachi

போலீஸாரின் கைககளுக்குச் சென்றுள்ள வீடியோவை பிரபல தனியார் செய்தி சேனலின்
இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில்
அரைநிர்வாணத்துடன் இருக்கும் பெண்ணை வீடியோ எடுத்து அந்த பெண்ணை தன் நண்பர்களான திருநாவுக்கர் மற்றும் இன்னும் சிலரின் காம இச்சைக்குப் பலியாக்கியுள்ளார் ரிஷ்வந்த். இந்த வீடியோவில் எவ்வளவோ தூரம் கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
pollachi
இதேபோல இன்னொரு வீடியோவில் அண்ணா விட்ருங்கண்ணா என கதறி அழுத போதிலும் விடாமால் கொடுமை செய்துள்ளான் ரிஷ்வந்த்.
பணம் வசதி உள்ளதால் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று தோழிகளாகப் பழகிய பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் ரிஷ்வந்த், திருநாவுக்கரசு, பார் நாகராஜன் கும்பல். இவர்களிடம் விசாரித்தால் இன்னும் பல தகவல் வெளியாகும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் இதில்
தொடர்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

pollachi
பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள் எல்லோரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதர்சங்கம் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :