திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 மார்ச் 2019 (20:23 IST)

பொள்ளாச்சி இளம்பெண்கள் வீடியோ விவகாரம்! அதிமுக தலைமை அதிரடி

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக தெரியவந்தது. 

இந்நிலையில் திருநாவுகரசுடன் தற்போது சபரிஷ் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாவற்றிற்கும் மேலாக பார் நாகராஜர் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. தற்போது நான்குபேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த நாகராஜை அக்கட்சியிலிருந்து தலைமை நீக்கி உத்தவிட்டுள்ளது. 
 
ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு  தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பொள்ளாச்சியில் மாசினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 
ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே நட்பாகப் பழகும் பெண்களை மயக்கி, ஆபாசமாக படம்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக  திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த இந்த விவகாரத்தில் தன்னோடு சேர்த்து நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசாரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 1000 க்கும் மேற்பட்ட  வீடியோக்கள் தற்போது போலீஸார் வசம் உள்ளதாகவும் தெரிகிறது.
 
போலீஸாரின் கைககளுக்குச் சென்றுள்ள வீடியோவை பிரபல தனியார் செய்தி சேனலின்  இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில்  அரைநிர்வாணத்துடன் இருக்கும் பெண்ணை வீடியோ எடுத்து அந்த பெண்ணை தன் நண்பர்களான திருநாவுக்கர் மற்றும் இன்னும் சிலரின் காம இச்சைக்குப் பலியாக்கியுள்ளார் சபரிஷ். இந்த வீடியோவில் எவ்வளவோ தூரம் கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
இதேபோல இன்னொரு வீடியோவில் அண்ணா விட்ருங்கண்ணா என கதறி அழுத போதிலும் விடாமால் கொடுமை செய்துள்ளான் ரிஷ்வந்த்.
 
பணம் வசதி உள்ளதால் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று தோழிகளாகப் பழகிய பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள் சபரிஷ், திருநாவுக்கரசு, பார் நாகராஜன் கும்பல். இவர்களிடம் விசாரித்தால் இன்னும் பல தகவல் வெளியாகும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 
பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள் எல்லோரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதர்சங்கம் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த நாகராஜை அக்கட்சியிலிருந்து தலைமை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான .எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சிக்கு அவப்பெயரும் கலங்கமும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும்,கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் ஏ.நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
இளம் பெண்ணை விடியோ எடுத்து பெண்ணையும் அவர் குடும்பத்தையும் மிரட்டியதாக அப்பெண் புகார் கொடுத்ததை அடுத்து நாகராஜ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.