திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:28 IST)

மத்திய பட்ஜெட் 2018-19: முக்கிய அம்சங்கள்!

* 2018-19-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நித்யமைச்சர் அருண் ஜெட்லி.

* உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்வு.
 
* மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பில் கிடக்கும் ரூ.50000 வரையிலான வட்டிக்கு வரி இல்லை.
 
* மூத்த குடிமக்களுக்கு வங்கி சேமிப்பில் இதுவரை 10000 வரையிலான வட்டிக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டு வந்தது.
 
* பட்ஜெட் எதிரொலி - பங்குச்சந்தை சரிவு. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் சரிந்து 35590-இல் வர்த்தகம்.
 
* தேசிய பங்குச்சந்தை குறியீட்டு புள்ளி எண் நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 109129இல் வணிகமாகிறது.

* ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்.
 
* வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும் அரசு எதிர்பார்த்த அளவுக்கு வரிவருவாய் இல்லை.
 
* வருமான வரி செலுத்துவோர் மருத்துவ செலவீனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவாக பெறலாம்.

* தனிநபர் வருமானவரி விலக்கிற்கான வரம்பு ரூ.2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை. இது அப்படியே தொடரும்.
 
* மாத சம்பளதாரருக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும்.

* பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது.
 
* கூடுதலாக ரூ.90 ஆயிரம் கோடி வரி வசூலாகி உள்ளது.
 
* ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்த புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
 
* ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப எம்பிக்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படும்.
 
* தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை.
 
* ரூ.250 கோடி வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பு.

* 2018-19 இல் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்.
 
* வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
 
* வருமான கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
* கருப்புப்பண தடுப்பு நடவடிக்கையின் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது.
 
* இந்த ஆண்டில் 41 சதவீதம் கூடுதலாக வருமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

* ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவது பாஜக கூட்டணி அரசின் பிரதான நோக்கம்.
 
* குடியரசுத்தலைவர், துணைத்தலைவர், ஆளுநருக்கான ஊதியம் உயர்வு.
 
* தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் காகித வடிவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
 
* பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக்கொள்ள வசதிகள் செய்யப்படும்.
 
* பிட்காய்ன் பண முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* குடியரசுத்தலைவருக்கு மாதச்சம்பளம் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
 
* துணைக்குடியரசுத்தலைவருக்கு மாதச்சம்பளம் 1.25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக அதிகரிப்பு.

* தற்போது 124 விமானநிலையங்கள் உள்ளன. இவற்றை ஐந்து மடங்கு உயர்த்த இலக்கு.
 
* அனைத்து தொழில் நிறுவனங்களுக்கு ஆதார் போன்ற தனி அடையாள எண் வழங்கப்படும்.
 
* 2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும்.
 
* அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.80000 கோடி நிதி திரட்ட இலக்கு.

* 18 ஆயிரம் கிலோமிட்டருக்கு இரட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும்.
 
* ஆதார் முறை காரணமாக பல்வேறு திட்டங்களின் பலன்கள் மக்களை எளிதாக சென்றடைகின்றன.

* 600 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
 
* டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3073 கோடி ஒதுக்கீடு.
 
* பனிமூட்டத்தின்போது ஏற்படும் ரயில் விபத்துகளை தவிர்க்க சிறப்பு கருவிகள் வாங்கப்படும்.

* தாழ்த்தப்பட்ட மக்களுக்காக 56619 கோடியில் 279 திட்டங்கள் உருவாக்கப்படும்.
 
* பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
 
* எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை மற்றும் சிசிடிவி வசதி ஏற்படுத்தப்படும்.
 
* 3600 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.
 
* 2019-க்குள் 4000 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
 
* ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
 
* நாட்டில் 4257 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்.

* 4000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படும்.
 
* 25 ஆயிரம் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்.
 
* பெங்களூருவில் 17000 கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
 
* விமானநிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
 
* வரலாற்று சிறப்புமிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப்படும்.

* காச நோயாளிகளின் ஊட்டச்சத்து உதவிக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு.
 
* மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்.
 
* ஸ்மார்ட் நகரங்களுக்கா ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு
 
* அம்ருத் திட்டத்தின் கிழ் நகரங்களுக்கு நீர் விநியோகிக்க ரூ.77640 கோடி நிதி ஒதுக்கீடு.
 
* கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
 
* எஸ்.டி நலத்திட்டங்களுக்கா ரூ.39.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

* 70 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
 
* பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

* முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடனில் 76 சதவீதம் பெண்களுக்கு தரப்பட்டுள்ளது.
 
* 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசே ஏற்கும்.

* பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

* ரூ.1200 கோடி செலவில் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
 
* 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்.

* நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
 
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை.
 
* விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
* நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.
 
* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.
 
* தேசிய சுகாதார கொள்கையின் கீழ் 1.5 லட்சம் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 
* காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.

* முதல்முறையாக குஜராத்தின் பரோடாவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
 
* பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்.
 
* பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகல்வியா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும்.
 
* 96 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசன திட்டத்திற்காக 2600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு.
 
* கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடைத்துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரை.
 
* இந்தியாவில் வாழும் அனைவருக்கும் 2022-க்குள் சொந்த வீடு கிடைக்கும்.

* 8 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாய்வு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
* 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும்.
 
* மகளிர் உதவிக்குழுவுக்கு ரூ.75 கோடி கடன் வழங்கபடும்.
 
* ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டில் 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.
 
* இந்தியாவின் நேரடி மானியத் திட்டம் உலக அளவில் பேசப்படும் வெற்றிகரமான திட்டமாக மாறியுள்ளது.

* ரூ. 12900 கோடி செலவில் தேசிய மூங்கில் கொள்கை வகுக்கப்படும்.
 
* இலவச செல்லுலார் திட்டம் விரிவு படுத்தப்படும்.
 
* விவசாய கழிவுகளை அழிக்க புதிய திட்டம்.
 
* உணவு பதப்படுத்தலுக்கான தொகை 715 கோடியிலிருந்து 1400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
* விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு.
 
* 2018-2019-ஆம் ஆண்டிற்கான விவசாய கடன் இலக்கு 11 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
* மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு ரூ.100000 கோடி ஒதுக்கீடு.

* உற்பத்தில் செலவிலிருந்து விவசாயிகளுக்கு 1.5 மடங்கு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்.
 
* விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை உயர்த்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
* விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு

* நாங்கள் பதவியேற்கும் போது நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது.

* விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க நடவடிக்கை.

* நாட்டின் உணவு தானிய உற்பத்தி கனிசமாக உயர்ந்துள்ளது.
 
* மாநில அரசுகளுடன் இணைந்து கல்வி தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* சராசரியாக மூன்று ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
 
* பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப்பண புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
* ஜிஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

* அரசின் சீர்த்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற்றுள்ளது.
 
* அரசின் நடவடிக்கையால் அன்னிய முதலீடு உயர்ந்துள்ளது.
 
* தற்போது இந்தியாவை உலகில் வேகமாக வளரும் நாடாக மாற்றியுள்ளோம்.

* வெளிப்படையான நிர்வாகம் என்ற உறுதிமொழியோடு அரசு செயல்படுகிறது.

* 2018-19-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து வாசிக்க தொடங்கினார்.

* நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது
 
* பட்ஜெட் உரை முதன் முதலாக இந்தியில் வாசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* ஜிஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இது

* பட்ஜெட் தாக்கல் எதிரொலி, எகிறிய பங்குச்சந்தை

* பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
 
* அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது. தொடர்ச்சியாக 5-வது முறை பட்ஜெட் தாக்கல் செய்ததில் அருண் ஜெட்லி முதலிடத்தில் இருக்கிறார்.