செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:17 IST)

பொருளாதார ஆய்வறிக்கை: மந்தமாக செயல்பட்ட வங்கிகள்....

2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
2017-18 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வங்களின் செய்லபாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது....
 
# 2017-18 ஆம் ஆண்டில் வங்கித்துறையின் செயல்பாடு (அரசு வங்கிகள்) செயல்பாடு மந்தமாகவே, சுறுசுறுப்பின்றி இருந்ததாம்.
# கார்பரேட் திவால் தீர்வு நடைமுறை மூலம் வங்கிகள் தங்களின் நிலுவை கடன்களை வசூலிப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 
# ஏறக்குறைய 525 நிறுவங்கள் ரூ.1,28,810 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. 
# வாராக்கடன் விவரங்கள் பொறுத்தவரை, வர்த்தக வங்கிகளில் கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 9.6 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
# அரசு துறை வங்கிகளில் வராக்கடன் கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 12.5 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.