2018-19ம் ஆண்டின் பட்ஜெட் : உரையை தொடங்கினார் அருண்ஜேட்லி

Last Updated: வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:32 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
பட்ஜெட் பற்றி தற்போது உரையாற்றி வரும் அருண் ஜேட்லி “ நாங்கள் பதவியேற்கும் போது நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது. விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுப்போம். நாட்டின் உணவு தானிய உற்பத்தி கனிசமாக உயர்ந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து கல்வி தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
 
சராசரியாக மூன்று ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப்பண புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஜிஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.அரசின் சீர்த்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற்றுள்ளது. அரசின் நடவடிக்கையால் அன்னிய முதலீடு உயர்ந்துள்ளது. ற்போது இந்தியாவை உலகில் வேகமாக வளரும் நாடாக மாற்றியுள்ளோம்.வெளிப்படையான நிர்வாகம் என்ற உறுதிமொழியோடு அரசு செயல்படுகிறது என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :