வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (19:26 IST)

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்?: பட்ஜெட்டில் எச்.ராஜா எதிர்பார்ப்பு!

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
 
2019 ஆண்டு பொதுத்தேர்தல் வர உள்ளதால் இந்த பாஜக தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் இது ஆகும். எனவே பாஜக இந்த பட்ஜெட்டை மிகவும் கவனமாக கையாளும் என கூறப்படுகிறது. இதனால் பல சலுகைகள் இதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மக்களுக்கு சுமை இல்லாத, சுமைகளை குறிக்கும் பட்ஜெட்டாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75% ஆக இருக்கும். மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50% வளர்ச்சி. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 31% உயர்ந்துள்ளது. ரீட்டெயில் பணவீக்கம் 4%த்திற்குள் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்லுகிறது என மத்திய அரசுக்கு ஆதரவாக கூறியிருந்தார்.
 
இதற்கு ஒரு நெட்டிசன் நல்ல விஷயம் ஆனால் GST-க்குள் பெட்ரோலும் டீசலும் வந்தால் நன்றாக இருக்கும் என கூறினார். இதற்கு பதில் அளித்த எச்.ராஜா, இந்த பட்ஜெட்டில் வரலாம் என எதிர்பார்ப்போம் என கூறியிருந்தார். இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இவை நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.