வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:34 IST)

மத்திய பட்ஜெட் : மூன்று மடங்கு எகிறிய ஜனாதிபதி சம்பளம்

மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில்    தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்    அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அதில்  குடியரசு மற்றும் துணை குடியரசு தலைவரின் சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
 
குடியரசு தலைவரின் (ஜனாதிபதி) சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும்,  துணை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்படுள்ளது என அவர் அறிவித்தார்.
 
அதேபோல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.