வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 17 மே 2018 (15:30 IST)

வரதட்சணை கொடுமை - 6 வயது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்

கேரளாவில் கணவரின் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர், தனது 6 வயது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடும் நாகரிகமும் எவ்வளவு தான் முன்னேறினாலும், மாறாத ஒரு விஷயம் வரதட்சணை. இந்த கொடுமையால், பலர் குடும்பத்தை இழக்கின்றனர். சிலர் வாழ்க்கையையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
 
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பிஜூ (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாரா. இவர்களுக்கு அமேகா (6) என்ற மகள் இருந்தார்.
 
இந்நிலையில் பிஜூ தன் மனைவியான தாராவிடம், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தாரா வீட்டில் யாருமில்லா நேரத்தில் தனது மகள் தாராவுடன் சேர்ந்து உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
 
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தாராவையும், அமேகாவையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 
இதனையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தாராவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.