ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (15:26 IST)

மனைவி சமந்தாவுக்கு ஓய்வு கொடுக்க விரும்பும் நாகசைதன்யா

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் அண்மையில் நடித்த ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத் திரை உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து  ஹிட் ஆகின.

தற்போது சமந்தா நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்களும் வெளியாகி உள்ளது.  இரண்டுமே வசூல்  ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளார். தன் மனைவிக்கு சினிமாவில் தற்காலிக ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பார் என சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.