புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (15:45 IST)

'எப்ப ட்ரீட்டு வைப்பீங்க'- சமந்தா-நாகசைதன்யா ஜோடியை கேட்கும் ரசிகர்கள்

சமந்தா, நாகசைதன்யா இருவரது படமும் ஒரே நாளில் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான நாகசைதன்யா நடித்த 'சைலஜா ரெட்டி அல்லுடு' எனும் படம் வெளியாகிய முதல் நாளிலே 12 கோடி வசூலை எட்டியுள்ளது. நாகசைதன்யாவின் ஒரு படம் முதல் நாளிலேயே 12 கோடி வசூலிப்பது முதல் முறை.

இதனால் நாகசைதன்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக உள்ளனர். இதற்கிடையே நாகசைதன்யாவின் மனைவியும் நடிகையுமான சமந்தா, அவரது நடிப்பில் விநாயகர் சதுர்த்திக்கு  வெளியாகி இருக்கும் 'யூடர்ன்' படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் நல்ல விமரிசனத்தை வழங்கி வருகிறார்கள். படமும் சூப்பரான கலெக்ஷனை அள்ளி வருகிறது. இதேபோல் சமந்தா ஹீரோயினாக நடித்த சீம ராஜா திரைப்படம் ஒரே நாளில் ரூ.13 கோடியை வசூலித்துள்ளது. இதனால் சமந்தாவும் ஹேப்பி, அவரது கணவர் நாகசைதன்யாவும் ஹேப்பி. இருவரிடமும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எப்ப ட்ரீட்டு என்று கேட்கிறார்கள்.