செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (12:52 IST)

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வா ?

’பாணா காத்தாடி’ என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தமிழ்,தெலுங்கு என இருமொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்த சமந்தாவுக்கு, அவரது காதலரும் நடிகருமான  நாகசைதன்யாவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் மனைவி சமந்தாவுக்கு ஓய்வு கொடுக்க விரும்புவதாக நாகசைதன்யா தெரிவித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிப்படங்களிலும் முதன்மையான நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம். இரும்புத் திரை போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி அடைந்தன,

தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வெளியாகியிருந்த  படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அடுத்து அவர் நடிப்பில் உருவாகிவரும் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நாகசைதன்யா கூறியிருப்பதாவது: தன் மனைவிக்கு சினிமாவில் தற்காலிக  ஓய்வு தேவை என்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பின் அவர் தொடர்ந்து நடிப்பார் என தெரிவித்திருக்கிறார்.