கட்சி தலைமை அல்லது முதல்வர் பதவி: அழகிரியின் பிளானால் ஆட்டம் காணும் திமுக
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியும் அமைதியாக இருந்ததால் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க பிரச்சனை இருக்காது என்றே அனைவரும் கருதினர். ஆனால் மு.க.அழகிரி திடீரென தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு இரண்டு நாட்களில் முடிவு எடுக்கவுள்ளதாக கூறியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்த்தால் அது கருணாநிதி எடுத்த முடிவுக்கு எதிராக இருக்கும் என்பதால் திமுக மூத்த தலைவர்கள் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அழகிரியை பகைத்து கொண்டு தென்மாவட்டங்களில் திமுக வெற்றி பெறுவது கடினம். இந்த முறை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதன் பின்னர் ஜென்மத்திலும் முதல்வர் ஆக முடியாது என்பதால் அழகிரியோடு இணக்கமாக செல்லவே ஸ்டாலின் விரும்புகிறாராம்
இந்த நிலையில் திமுக தலைவர் அல்லது முதல்வர் பதவி இரண்டில் ஒன்று வேண்டும் என்று அழகிரி தரப்பில் இருந்து கோரிக்கை வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதெல்லாம் ஊடகங்களும் எதிர்க்கட்சியினர்களும் கிளப்பிவிடும் வதந்திதான் என்றும் அழகிரி பிரச்சனையை ஸ்டாலின் திறமையாக கையாண்டு தான் தலைவரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிப்பார் என்றும் திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்