1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Oosi Soru Vereamani hashtag in twitter trend

டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் 'ஓசி சோறு வீரமணி'

#ஓசிசோறுவீரமணி
திமுக தலைவர் மறைவிற்கு பின்னர் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை எதிர்க்க மு.க.அழகிரி தயாராகி வரும் நிலையில் அழகிரியை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, ''வீட்டில் இருப்பவர்கள் குறித்து கேளுங்கள். வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்' என்று கூறியிருந்தார். வீரமணியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, 'காலம் காலமாக தி.மு.கவிலும், அ.தி.மு.கவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்” என்று கலாய்த்து டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

ஓசிச்சோறு என்று கீ.வீரமணியை தயாநிதி அழகிரி கலாய்த்ததை அடுத்து தற்போது டுவிட்டரில் #ஓசிசோறுவீரமணி என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது. ஏராளமான நெட்டிசன்கள் இதில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத கீ.வீரமணி தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
மிதக்கும் வெள்ளத்தில் திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி