1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (15:35 IST)

யோவ்... என்னய்யா நீ பேசிட்டே இருக்க... செய்தியாளரின் கேள்வியால் கடுப்பான அமைச்சர்

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
 
அந்த வகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சட்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது நடந்த செய்தியாளரின் சந்திப்பின் போது, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மோடிக்கு பொருளாதாரம் தெரியாது என விமர்சித்ததைப் பற்றி உங்களின் கருத்து என்ன என கேட்டார்.
 
அது பற்றி தமக்கு தெரியாது எனவும் அந்த விஷயத்தை பற்றி அறிந்த பின்னர் பதிலளிப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஒரு அமைச்சருக்கு இதுகூட தெரியாதா என அந்த செய்தியாளர் அமைச்சரிடம் கேட்க கடுப்பான அவர் யோவ் நான் தான் தெரியாது, அதைப்பற்றி தெரிந்த பின்னர் பதிலளிக்கிறேன் என கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும் அதை பற்றியே கேள்வி கேட்டால் என்ன அர்த்தம் என கேட்டார்.
 
ஆனால் அந்த செய்தியாளர் மீண்டும் மீண்டும் அமைச்சரிடம் அதே கேள்வியை கேட்க அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.