புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (22:11 IST)

கவிக்கோவா? வைகோவா? மேடையில் உளறிய வைரமுத்து

அரசியல் கட்சி தலைவர்கள் மேடையில் பேசும்போது வாய்தவறி உளறுவது என்பது தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. ஆனால் மேடை பேச்சுக்கென்றே ஒரு இலக்கணத்தை வகுத்து தூய தமிழில் பேசி வரும் கவியரசு வைரமுத்துவும் விழா ஒன்றில் பேசியபோது தடுமாறிய விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூரில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவியரசு வைரமுத்து பேச்சை முடிக்கும்போது வாழ்க கவிக்கோவின் புகழ் என்று கூறுவதற்கு பதிலாக வாழ்க வைகோவின் பெரும்புகழ் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைத் திறன் குறித்து விரிவாக, சுவையாக பேசிய வைரமுத்து இறுதியில் தனது பேச்சை முடிக்கும் வாழ்க வைகோவின் பெரும் புகழ் என கூறினார். பின்னர் பார்வையாளர்கள் அவருடைய தவறை சுட்டிக்காட்டியவுடன், வாழ்க கவிக்கோவின் பெரும் புகழ் என முடித்துவிட்டு, தன்னுடைய தடுமாற்றத்திற்கு அரசியல் பாதிப்பே காரணம் என்று கூறினார்.

இதே விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, 'விரைவில் வைரமுத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.