1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Rajini's Wax statue opened in Jaipur fort

நடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை

ரஜினி
ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்த காலா படம் கடந்த 7-ந் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில், நடிகர் ரஜினி சிலையை வைக்கும்படி தமிழ் ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி காலா ரிலீசான 7-ந் தேதியன்று 5.9 அடி உயரத்தில் 55 கிலோ எடை கொண்ட ரஜினியின் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலையை காண ஏராளமான ரசிகர்கள் குவிகிறார்கள். மேலும் பலர் ரஜினியின் மெழுகு சிலையுடன் செல்பியும், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்
வாட்ஸ் அப் வதந்தி - 2 அப்பாவி இளைஞர்களைக் கொன்ற பொதுமக்கள்