1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (20:21 IST)

162 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்; அசத்திய இந்திய பவுலர்கள்

டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங் செய்தது. புவனேஷ்வர் குமார் ஆரம்பத்திலே தொடக்க வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
 
இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் முக்கிய நேரத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 
 
பகுதி நேர பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.