ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (18:24 IST)

பிறந்த நாளில் மக்களுக்காக ரோஜா ஆரம்பித்த தொழில்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய சினிமாக்களில்  பல படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா.  ஆந்திராவைச் சேர்ந்த இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு அரசியலில் இறங்கிவிட்டார்.  ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
 
அவர் நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4க்கு வழங்குகிறாராம்
 
இதை கேள்விபட்ட மக்கள் ரோஜாவின் இந்த நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.