புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (13:07 IST)

கேட்டது தண்ணீர் , பெற்றது துணைவேந்தர்! என்ன விளையாட்டு இது? கமல் காட்டம்

கேட்டது தண்ணீர் , பெற்றது துணைவேந்தர்! என்ன விளையாட்டு இது? கமல் காட்டம்
காவிரி பிரச்சனை தமிழர்களையும் கன்னடர்களையும் நிரந்தரமாக பிரித்துவிடும் அளவுக்கு பெரிதாகி கொண்டே போகிறது. இந்த பிரச்சனை இரு மாநிலத்திற்கும் பாதகமில்லாமல் தீர்க்க வேண்டிய மத்திய அரசோ, பிரச்சனையை மேலும் தூண்டிவிட்டு அதில் குளிர்காண நினைக்கின்றது.

தமிழகத்திற்க்கு தண்ணீர் விடமுடியாது என்றும், தமிழ் நடிகர்களான ரஜினி, கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமத்க்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு ஒன்று கூறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா என்பவரை தமிழக கவர்னர் நியமனம் செய்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: நாம் கேட்டது தண்ணீர் , ஆனால் கர்நாடகத்திடம் இருந்து நமக்கு கிடைத்ததோ துணைவேந்தர். இதிலிருந்தே மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளி தெளிவாக தெரிகிறது. என்ன விளையாட்டு இது? நம்மை தூண்டிவிடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது