1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூன் 2018 (19:24 IST)

ஜூனியர் என்.டி.ஆருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவருடைய தாத்தா என்.டி.ராமாராவ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக  இருந்ததோடு, ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அவருடைய பெயரைத்தான் இவருக்கும் வைத்துள்ளனர்.
 
ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் ‘அபய் ராம்’. இந்நிலையில், அவருக்கு இரண்டாவதாகவும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘குடும்பம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. பையன் பிறந்திருக்கிறான்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.