சிவகார்த்திகேயனுக்கு ரூ.8 கோடி சம்பளம்

Last Modified திங்கள், 14 மே 2018 (14:35 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்காக, அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. 
எம்.ராஜேஷ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக் – மெர்வின்  இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
 
சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணச் சொல்லி அக்ரிமெண்ட் போடப்பட்டது. அப்போது  சிவகார்த்திகேயனுக்கு 80 லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், சிலபல பிரச்னைகளால் அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனால் நடிக்க முடியவில்லை.
அக்ரிமெண்ட் இருப்பதால், விஷயம் பஞ்சாயத்துக்குப் போனது. பலமுறை பஞ்சாயத்து நடந்தபிறகு, ஒருவழியாக நடித்துக் கொடுப்பதென முடிவு செய்துள்ளார்  சிவகார்த்திகேயன். ஆனால், தன்னுடைய தற்போதைய சம்பளமான 15 கோடி ரூபாய் வேண்டும் எனக் கேட்க, மறுபடியும் பஞ்சாயத்து பேசி ஒருவழியாக 8 கோடி ரூபாய்க்கு இறங்கி வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :