1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (21:23 IST)

அமைச்சர் செல்லூர் ராஜு நாகாக்க வேண்டி – கரூரில் நகரத்தார் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்

கரூரில் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிராக நாட்டுக்கோட்டை நகரத்தார் இன மக்கள் போராட்டம் நடத்தினர். 


கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சினிமா நடிகர் ரஜினிகாந்தை பற்றி கருத்துக்கூறிய போது, அவரால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும், வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்க முடியும் என்று நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பெண்களை குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.


இதனால் உலகெங்கும் வாழும், நாட்டுக்கோட்டை நகரத்தார் இன மக்கள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில், கரூர் நகரத்தார் சங்கத்தலைவர் செந்தில்நாதன் தலைமையில், செயலாளர் மேலை.பழநியப்பன் முன்னிலையில் ஏராளமான நகரத்தார் இன மக்கள் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இனி தமிழகத்தில் இது போன்ற சர்ச்சை பேச்சுகள் கூடாது என்றும் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது.


    - கரூர் அனந்தகுமார்.