சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் பட டைட்டில் என்ன தெரியுமா?

Last Modified ஞாயிறு, 13 மே 2018 (09:27 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தந்தை-மகள் கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் மற்றும் அருண்காமராஜ் இயக்கும் முதல் படம் மற்றும் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் இவ்வருட இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :