வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (11:57 IST)

ஒரே மாதத்தில் கருணாநிதியை மறந்த திமுகவினர்

ஒரே மாதத்தில் கருணாநிதியை மறந்த திமுகவினர்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் காலமானதை அடுத்து மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்று அக்கட்சியை வழிநடத்தி வருகிறார்.

கருணாநிதி உயிருடன் இருந்தபோது எந்த விழாவானாலும் கருணாநிதியின் படத்தை முதலில் போட்டு போஸ்டர் அடிக்கும் திமுகவினர் தற்போது கருணாநிதியை மறந்து மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர் அடித்து வருவதாக கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு சமீபத்தில் திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டரில் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு படங்கள் மட்டுமே உள்ளது. கருணாநிதியின் பெயரோ, படமோ இல்லாதது உண்மையான திமுக தொண்டர்களை வருத்தமடைய செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.