ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (07:42 IST)

இன்று கரன்சி எண்ணுபவர்கள் நாளை கம்பி எண்ணுவார்கள்: உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராகவே கிட்டத்தட்ட மாறிவிட்ட உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கும் மரியாதையை மற்ற தலைவர்களும் தொண்டர்களும் இவருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பழம்பெரும் அரசியல்வாதி போல் உதயநிதி தற்போது பேச ஆரமித்துவிட்டார்.

அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து தமிழகத்தில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:

அதிமுக அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த திமுக தலைவருக்கு நன்றி. நான் அதிகமாக பேச விரும்பவில்லை. நமது திமுக தலைவர் முப்பெரும் விழாவில் சொன்னது போல் இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும்.

இப்போது கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அமைச்சர்கள் எல்லாம் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயில் கம்பிகளை எண்ணுவார்கள்' என்று உதயநிதி பேசினார்