பேராசிரியரின் முகத்தில் கருப்பு மை பூசி பாஜக மாணவ அமைப்பினர் அட்டூழியம்!

Last Updated: புதன், 27 ஜூன் 2018 (19:05 IST)
குஜராத் கல்லூரி மாணவர் தேர்தலின் போது தங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி பேராசியர் ஒருவரின் முகத்தில் கருப்பு மை பூசி பாஜக மாணவ அமைப்பினர் அட்டூழியம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத்தில் கட்ச் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.கே.வி.கே. பல்கலைக் கழகத்தில் மாணவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக போட்டியிடும் மாணவர்கலின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
 
அந்த பெயர் பட்டியலில் தங்களது ஆதரவு மாணவர்கலீன் பெயர் இல்லை என்பதால், இதற்கெல்லாம் குறிப்பிட்ட பேராசியர்தான் காரணம் என கூறி, பேராசிரியர் ஒருவர் முகத்தில் கறுப்பு மை பூசி அவரை ஊர்வலமாக அழைத்து வந்து அட்டூழியம் செய்துள்ளனர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள். 
 
இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள பல்கலைக் கழக துணைவேந்தர் சிபி ஜடேஜா, போலீசில் புகார் கொடுத்தடஹி அடுத்து ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :