கிட்னி ஃபெய்லியரான அண்ணனுக்கு கிட்னி தர உயிர்தியாகம் செய்த தம்பி

suicide
Last Modified திங்கள், 25 ஜூன் 2018 (09:40 IST)
அண்ணனுக்கு கிட்னி தர தனது உயிரை தியாகம் செய்த தம்பியின் செயல் மனதை உருக வைக்கின்றது.
குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியை சேர்ந்தவர் கெனிஷ்(24). இவரது தம்பி நைட்டிக்குமார் தாண்டல்(19). தாண்டல் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் தாண்டலின் அண்ணன் கெனிஷிற்கு ஏற்பட்ட கிட்னி ஃபெய்லியரால், அவர் டயாலிசிஸ் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இனி டயாலிசிஸ் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது. மாற்று கிட்னியின் கிடைக்காமல் கெனிஷ் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு எந்நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழல் இருந்தது.
 
அண்ணன் கெனிஷ் மீது அதீத பாசம் கொண்ட தாண்டல், அண்ணனைக் காப்பாற்ற தனது கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்து, மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தாண்டலின் உடலை மீட்டனர். மேலும் தான்டல் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். அதில் தனது கிட்னியை அண்ணனுக்கு தானமாக வழங்குங்கள் என இருந்தது.
 
தாண்டல் தற்கொலை செய்துகொண்டு 36 மணிநேரத்திற்கு பிறகே உடல் கைப்பற்றப்பட்டதால், அவரது உடல் உறுப்புகளை யாருக்கும் பொருத்த முடியாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால்   தாண்டலின் தியாகம் வீணானது.


இதில் மேலும் படிக்கவும் :