1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (23:59 IST)

குஜராத்தை அடுத்து ஆஸ்திரேலியா: பொன்.மாணிக்கவேல் அதிரடி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ராஜராஜசோழன் மற்றும் அவருடைய பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோர்களின் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஐஜி பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் குஜராத்தை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிலைகளை மீட்க ஆஸ்திரேலிய தூதருடன் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆகியோர் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை .நடத்தினர்
 
இந்த பேச்சுவார்த்தையின் பயனாக தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகளில் 7 சிலைகளை ஒப்படைக்க தயார் என்று ஆஸ்திரேலிய தூதர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே விரைவில் ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் தமிழகத்திற்கு வரவுள்ளன என்பது அனைவருக்குமான மகிழ்ச்சியான செய்தி ஆகும்