வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (21:59 IST)

பாஜக வெற்றி பெற அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் ஐடியா

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வெற்றி பெற ஒரு ஐடியாவை கூறியுள்ளார். இந்த ஐடியாவை கடைபிடித்தால் பாஜக வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு இருந்த நற்பெயரை பயன்படுத்தி கொள்ள பாஜக முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக வாஜ்பாயின் பெயரை ராம்லீலா மைதானம் உள்பட சில இடங்களுக்குச் சூட்டி பாஜக வாக்குவங்கி அரசியல் நடத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், '“ராம்லீலா மைதானம் உள்பட ஒருசில இடங்களுக்கு வாஜ்பாய் பெயரை மாற்றுவதற்கு பதில் பிரதமரின் பெயரை பாஜக மாற்றினால் ஒருவேளை வாக்குகள் விழ வாய்ப்பு உள்ளது என்றும், ஏனெனில் மக்கள் அவர் பெயரில் வாக்குகள் அளிப்பதில்லை” என்றும் கிண்டலுடன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். 
 
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்