ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (20:29 IST)

நிர்மலா சீதாராமன் - செங்கோட்டையன் திடீர் மோதலால் பரபரப்பு

அதிமுகவில் உள்ள அமைச்சர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் அமைச்சர் செங்கோட்டையன். தனது கல்வித்துறை சம்பந்தப்பட்டதை தவிர வேறு எந்த துறை குறித்தும் அவர் இதுவரை பேட்டி அளித்ததில்லை. மேலும் இவர் கல்வித்துறையில் கொண்டு வந்து கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில், 'தமிழகத்தில் தரமான பாடத்திட்டங்களை கொண்டுவர அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 'பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எங்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும்' என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே திமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவதை அடுத்து அதிமுக, பாஜக தலைவர்கள் பேட்டியின் மூலம் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.