1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Aramm-2 shooting starts from september month

அறம்-2 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?

அறம்-2
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் அறம் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபிநயினார் இயக்கிய முதல் படமான 'அறம்' திரைப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பாராட்டினர். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது.
 
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் தொடர்ச்சியாக அறம்-2 இயக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது. இதில் நயன்தாராவே நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், அறம்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் மத ரீதியிலான வன்முறைகள், சாதிய கொடுமைகளை எதிர்த்து நயன்தாரா போராடுவது போல கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஜிஎஸ்டிக்குள் வருமா பெட்ரோல்? விலை உயர்வுக்கு தீர்வு என்ன?