திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூன் 2018 (21:00 IST)

‘ஏ’ பட இயக்குநருக்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்

‘ஏ’ பட இயக்குநரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அடல்ட் காமெடிப் படங்களான  இந்த இரண்டு படங்களுக்கும், மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. இதனால் இவரை ‘ஏ’ பட இயக்குநர் அல்லது ‘பிட்டு’ பட இயக்குநர்  என்றுதான் அழைக்கிறார்கள்.
 
இந்நிலையில், ‘கஜினிகாந்த்’ என தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி முடித்துவிட்டார் சந்தோஷ் பி ஜெயக்குமார். ஆர்யா நாயகனாகவும், ‘வனமகன்’  சயீஷா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சதீஷ், காளி வெங்கட், கருணாகரன், சம்பத் ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், உமா பத்மநாபன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கலாம்.