ஜெயலலிதா படம் போட்ட சேலைகள்: பரபரப்பான விற்பனை
தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது நிலையில் ஜெயலலிதா படம் போட்ட சேலைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வித்துள்ளது.
இந்நிலையில், அம்மா உணவகம் முதலிய இடங்களில் இருந்த ஜெயலலிதாவின் உருவப்படங்கள் அகற்றப்பட்டன.
அத்துடன், ஸ்மால் பஸ்ஸில் இடம் பெற்றிருந்த இரட்டை இலை போன்று அமைந்துள்ள படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
அனைத்து, அரசியல் கட்சிகளும் தங்கள் பலத்தை திரட்ட கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் படம் போட்ட ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா படம் போட்ட சேலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு சேலை பொதுமக்களின் பார்வையில் படும்படியாக கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கரையுடன் கூடிய வேட்டி மற்றும் துண்டு ஆகியவையும் தொங்கவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.