திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (11:37 IST)

மனைவி சொன்ன வார்த்தை! துள்ளிக்குதித்து கத்திய சென்ட்ராயன்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம்  போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரை சந்திக்க வைக்கிறார்கள்.
இந்த சந்திப்பில் நாள்தோறும் பல்வேறு பாசப்பிணைப்பான காட்சிகளும் நெஞ்சை தொடுகின்றன. இன்று  இரவு ஒளிபரப்பாகும் காட்சிகள் தொடர்பாக புதிய  ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
 
அதில் சென்ட்ராயன் மனைவி பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். நேராக கணவரை கட்டி அணைத்து, நீ அப்பா ஆகிட்டா மாமா என்கிறார் சென்ட்ராயன் மனைவி. இதைக் கேட்டு உற்சாகத்தில் கத்தியபடி துள்ளிக் குதிக்கிறார் சென்ட்ராயன். பின்னர் ஓடிச் சென்று மனைவியை மீண்டும் கட்டி அணைத்து கண்ணீர் விடுகிறார்.  இத்துடன் ப்ரேமோ முடிகிறது.