1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 2 மார்ச் 2026 (11:04 IST)

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!
பழனியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆரி, தனது அடுத்த படமான ‘ஃபோர்த் ஃப்ளோர்’ எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உருக்கமாக பேசினார். 
 
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய்க்கிழவி’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டதால், அந்த படத்திற்கு முன்னணி மால்களில் உள்ள திரையரங்குகள் எளிதாக கிடைத்தன என்று ஆரி குறிப்பிட்டார். 
 
ஆனால், ‘ஃபோர்த் ஃப்ளோர்’ படத்தின் தயாரிப்பாளரிடம் சிவகார்த்திகேயன் அளவிற்கு பண வசதி இல்லை என்பதால், தங்களால் போதிய விளம்பரங்களை செய்ய முடியவில்லை என்று ஆரி வேதனை தெரிவித்தார்.
 
நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் விளம்பரம் இல்லாத காரணத்தால் தியேட்டர்களை பிடிக்க முடியாமல் திணறுவதாகவும் அவர் கூறினார். படத்தின் தரத்தை விட, விளம்பரங்களுக்கு செய்யப்படும் செலவே தியேட்டர் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
ரசிகர்கள் தரமான கதைகளை ஆதரிக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது. 
 
Edited by Siva