வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (17:05 IST)

அந்த வீடியோ நீக்கம் : மகத்தை மன்னித்து விட்டாரா பிராச்சி?

பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மகத் பற்றி அவரின் காதலி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த வீடியோவை நீக்கியுள்ளார்.

 
பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே நடிகர் மகத் தனது காதலியுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அதில், என் காதலியை மிஸ் செய்வேன் என உருக்கமாக பேசியிருந்தார். அந்த வீடியோவை மிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தார்.
 
அந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மகத், நடிகை யாஷிகாவின் மீது காதல் கொண்டிருப்பது போல் நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் மீது எனக்கு காதல் இருக்கிறது என வெளிப்படையாக பேசினார். அதேபோல், மஹத்துக்கு வெளியே ஒரு காதலி இருக்கின்றார் என்பது எனக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே தெரியும். அப்படி இருந்தும் அவர் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அதன்பின்னர் அது காதலாக மாறியது என்று யாஷிகா கூறினார்.
 
இதைக்கண்ட மகத்தின் காதலி பிராச்சி கடும் அதிர்ச்சி அடைந்தார். எனவே, பிக்பாஸ் விட்டிற்கு செல்லும் முன் மகத் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பிராச்சி ‘இப்படித்தான் மகத்தை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினேன். மஹத் என் மீது காதலில் இருந்தார். நானும் அவரை இப்போதும் காதலிக்கிறேன். மகத்துடன் நான் தற்போது இல்லை. எனவே மற்றவர்கள் கருத்துகளுக்கு நான் பதில் கூற முடியாது. ஆனால், மஹத்தை நேரில் சந்தித்து இதுபற்றி விவாதிப்பேன். அவர் யாஷிகாவை காதலிக்கிறார் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. எனக்கு இது காயத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இதனால் என் வாழ்க்கை பாதிக்காது’ எனக் கூறியிருந்தார்.

 
எனவே, மகத்துடனான காதலை அவர் முறித்துக்கொண்டதாகவே பலரும் கருதினர். இந்நிலையில்தான், பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேற்றப்பட்டார். எனவே, அவர் மீண்டும் தனது காதலியுடன் சேர்வாரா இல்லை யாஷிகாவுடன் காதலை தொடர்வாரா என சந்தேகம் ஏற்பட்டது.
 
இந்நிலையில், வேதனையுடன் வெளியிட்ட வீடியோவை பிராச்சி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். எனவே, மகத் அவரை சமாதனப்படுத்தியிருக்கலாம் எனவும் அவரை பிராச்சி மன்னித்து விட்டார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.